காதலின் மீதியோ நீ-17

காதலின் மீதியோ நீ-17

காதலின் மீதியோ நீ-17

நித்ராவைக் கல்யாண மண்டபத்தில் இருந்து டேக்ஸியில் ஏர்போர்ட் கூட்டிட்டு வந்தான்.

ஆயுஷ் அவளிடம் எதுவுமே பேசவேயில்லை.அவளைத் தொட்டுக்கூட உட்காராது முன்பக்கமாக உட்கார்ந்திருந்தான்.

அவள் அப்படியே மணப்பெண் அலங்காரத்திலேயே இருத்தாள்.எல்லோரும் ஏர்போர்ட்டில் அவளைத் திரும்பிப் பார்த்ததும் ஒருமாதிரி வெட்கமாக உணர்ந்தாள்.

அவனது பின்னாடிபோய் ஒளியவும் திரும்பி என்னாச்சு என்று கண்கள் சிவந்துக்கேட்டான்.

“அது எல்லோரும் பார்க்கிறாங்க ஒரு மாதிரி எம்பரேஸிங்கா இருக்கு”

ஓஓ.. இவங்கப் பார்க்கிறதுக்கெல்லாம் அவமானமா உணர்வளுக்கு ஒருத்தனைக் காதலிச்சு அவன்கூட படுக்கையை பகிர்ந்துக்கிட்டதுக்கு அப்புறம் இன்னொருத்தனை புதுசா தேடிக் கல்யாணமேடையில் உட்காரும்போது உனக்கு வெட்கம் வரலையா?அப்போ அந்த வெட்கத்தையெல்லாம் வித்துட்டியா என்ன?”என்று அவ்வளவு அருவருப்பாகக் கேட்டான்.

அந்த வார்த்தையில் அப்படியே துடித்துப்போனவளுக்கு ஒருமாதிரி மயக்கம் வருவதுபோன்று இருக்கவும் ஆயுஷ் என்று அவனது கையைப்பிடித்தாள்.

அவனோ ச்சீ தொடாதே! உன் நடிப்பையெல்லாம் நம்பி ஏமாந்ததுபோதும் என்று தள்ளிவிட்டான்.

ஏற்கனவே ஒருமாதிரி மயக்கத்திற்குப் போனவள் அவன் தள்ளியதும் பக்கத்தில் இருந்தச் சேரில் அப்படியே கவிழ்ந்து விழுந்துவிட்டாள்.

அவளுக்கு எழுந்திருக்கவும் முடியாது அவனைக் கூப்பிடவும் முடியாது அப்படியே படுத்திருந்தாள்.

அவள் எழும்பாது படுத்திருக்கவும் கையில் வைத்திருந்த பாட்டில் தண்ணீரை கடகடவென்று அவள்மேல் தெளித்தான்.

அதில் கொஞ்சம் பதறியவள் எழுந்திருக்க முடியாது திணறவும் கையைப்பிடித்து இழுத்துத் தூக்கி உட்கார வைத்தவனிடம் தண்ணி வேணும் என்று தனது கையால் சைகை செய்தாள்.

அவள் என்னதான் தன்னை விடுத்து வேறொருவனை திருமணம் செய்ய போயிருந்தாலும் தான் நேசித்தவன் அல்லவா தான் உயிரோடு உயிராக கலந்தவன் அல்லவா அவள் தண்ணீர் என்று பாவமாக கேட்டதும் தன்னைத்தானே கொஞ்சம் நிதானப்படுத்தி அவளுக்கு தண்ணி குடிக்க கொடுத்தான்.

அவ்வளவுதான் அதோட அவளிடம் அவன் பேசவும் இல்லை அவளுக்கு வேற எதுவும் கொடுக்கவும் இல்லை.அப்படியே டெல்லி வந்து இறங்கியதும் அவனது காரை வரச் சொல்லியிருந்ததால் அதில் அவளை அழைத்துக் கொண்டுபோய் நேராக வீட்டிற்கே போய்விட்டான்.

அவனது வீட்டில் அவன் யாருக்கும் எதுவும் சொல்லவே இல்ல போனில் கூட தகவல் சொல்லவில்லை நேரடியாக வீட்டிற்கு போகிறேன் என்றதும் இறங்க மறுத்து பயத்தில் உட்கார்ந்து இருக்கும் நித்ராவே கைய பிடித்து இழுத்து தன்னோடு நிற்க வைத்திருந்தான்.

அவன் கார் வந்ததுமே எல்லோரும் எட்டிப் பார்த்தனர்.ஏனென்றால் நேத்தே யாரிடமும் சொல்லாது போனவன் இப்போதுதான் வந்து நிற்கிறான்.அதுவும் ஒரு பொண்ணோடு வந்து நிற்கிறான் என்றதும் அவனது பாட்டி நீலம் கண்கள் இடுங்கப் பார்த்தார்.

ஆயுஷை பார்ப்பதை விடவும் நித்ராவை தான் எடை போட்டு பார்த்தால் அவள் கழுத்தில் கிடந்த தாலி முதல் கொண்டு நகைகள் வரைக்கும் ஒவ்வொன்றாக கூர்ந்துக் கவனித்துப் பார்த்தார்.அவள் கட்டியிருந்த புடவையின் மதிப்பைக் கணித்தார்.

அவ்வளவுதான் உதட்டை வளைத்து என் வீட்டில் வேலைசெய்யக்கூடத் தகுதியில்லாத ஒருத்தியை கல்யாணம் பண்ணிக்கூட்டிட்டு வந்திருக்கான் பேரன்.அவனுடைய விருப்பமாக இருந்தாலும் இது நம்மகுடும்பத்துக்க் ஒத்துவராதே என்று கண்டுக்காது அப்படியே உள்ளே போனார்.

அதற்குள் பூர்வி வேகமாக ஓடிவந்தார். அதைப் பார்த்த நீலமோ”ரொம்ப அதிசயமாக ஓடிப்போய் பார்க்காத.உன் மகன் அன்னைக்கு நாம பேசியது போலவே ஒரு தாலி கட்டி கூட்டிட்டு வந்திருக்கான் ஆனால் தகுதி இல்லாத ஒருத்தியை கூட்டிட்டு வந்திருக்கான் இந்த குடும்பத்தின் பாரம்பரியம் என்ன அந்தஸ்து என்ன அதற்கு கொஞ்சமும் தகுதி இல்லாத ஏதோ ஒரு மதராசியை போய் கல்யாணம் கட்டிக் கொண்டு வந்திருக்கிறான். உன் மகன் எல்லாம் வெளிநாட்டில் படித்தும் எத்தனை பெரிய பிசினஸ் எடுத்து நடத்தியும் மூளை இல்லாத முட்டாளாக தான் இருந்திருக்கிறான் எந்த சத்தம் போட்டுவிட்டு உள்ளே போய்விட்டார்.

பூர்வியோ நீலம் சொன்னதைக் கேட்டாலும் ஆயுள் சேர்த்தவன் அல்லவா அதனால் ஆரத்தி கரைத்து எடுத்து அவர்களை வரவேற்று உள்ளே அழைத்து வந்தார்.

பூர்வியும் நன்கு படித்தவர் என்பதால் சகஜமாக நித்ராவிடம் பேச்சு கொடுத்தார். அதற்குள் ஆயுஷ் என்னென்ன நடந்தது எப்படி அவளை கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்தேன் என்பது வரைக்கும் தனது தாயிடம் சொல்லிவிட்டான்.

அதைக்கேட்ட பூர்விக்கு ஒருமாதிரி தர்மசங்கடமான நிலை. அவர்கள் இருவரும் கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்காங்கன்னு சந்தோசப்படுறதா? இல்லை இப்படியானதோரு நிலையில் வந்திருக்காங்களே என்று வருத்தப்படுறதா என் தெரியாது நின்றிருந்த பூர்வி நித்ராவைத் திரும்பிப் பார்த்தார்.

நித்ராவோ குனிந்தத் தலை நிமிராது கண்ணீரோடு தனது கைவிரல்களைப் பிடித்து கிடுகிடுவென்று நடுங்கியவாறு நின்றிருந்தாள்.

அவளது அருகில் வந்த பூர்வி அவளது கையைப்பிடித்து”எந்த சூழ்நிலையில் நீ இப்படிச் செய்தன்னு தெரியல.ஆனால் தப்போ சரியோ உங்க வாழ்க்கையை ஆரம்பிச்சிட்டீங்க. சந்தோசமா வாழுங்க”என்று ஆறுதலாகச் சொன்னவர் அவளை ஆயுஷின் ரூமுக்குக் கூட்டிட்டுப் போய்விட்டார்.

ஆயுஷ் உடனே குளித்துக் கிளம்பி ஆபிஸிற்குப் போய்விட்டான்.

ஒன்றுமே புரியாது அந்த அறைக்குள்ளாகவே உட்கார்ந்திருந்தவளுக்கு பைத்தியம் பிடிப்பது போன்றே இருந்தது.

இந்த வாழ்க்கை எனக்கு இனியும் என்னவெல்லாம் வைச்சிருக்கோ தெரியலையே! ஒருநாளைக்குள்ளாகவே ஆயுஷின் கோபத்தையும் வார்த்தைகளையும் தாங்கிக்க முடியலையே. இனி வாழ்நாளெல்லாம் அவன் வெறுத்துப் பேசுறதைத் தாங்கிக்கணுமோ?

என்மேல் எவ்வளவு காதல் வைச்சிருந்தான்.இப்போ அவ்வளவும் வெறுப்பாக மாறிட்டுதே! இதைவிடவும் பெரிய தண்டனை எனக்குக் கிடைக்காது என்று வருத்தப்பட்டாள்.

அங்கே ஒருத்தி புதுசாக வந்திருக்கா அவளுக்கு என்னத் தேவை என்னுக்கூட கேட்கயாருமில்லை. அப்படியே படுத்திருந்தவளைக்கு பசிதான் மொத்தமாக அவளை சுருட்டிப்போட்டிருந்தது.

அவள் அப்படியே பசியில் சுருண்டுப் படுத்திருக்க 

யாரோ கதவைத் தட்டினார்கள்.

யாரென்று பார்க்கவே பயமாக இருந்தது.ஏதோ சிங்கம்புலிகள் நடமாடும் காட்டுக்குள் வந்ததுபோன்றே கிடுகிடுவென்று பயந்துப் போய் கதவைத் திறந்தாள்.

அங்கே மொத்தகுடும்பமும் நின்றிருந்தனர். பூர்விதான் அவளது கையைப் பிடித்துக் கொண்டார்.

ஜெகன்னாத் அவளைப் பார்த்தவர் பூர்வியை முறைத்துவிட்டுப் போய்விட்டார். நீலம் கண்டுக்கொள்ளவேயில்லை. ஜெகன்னாத்தின் தம்பிக் குடும்பங்களும் அக்கா குடும்பம் என்று எல்லோரும் நிற்க பூர்விதான் ”இதுதான் ஆயுஷ் பேட்டோவோட மனைவி. அவங்க குடும்பத்துல இவக் காதலை ஏத்துக்கலையாம் அதுதான் அவளை உடனே கல்யாணம் பண்ணிக்கூட்டிட்டு வந்துட்டான்”என்று ஏதேதோ சொல்லி சமாளித்தார்.

அதைக்கேட்ட நித்ராவுக்கு உண்மையில உள்ளம் வலியில் கலங்கியது. அந்த அரண்மனை போன்ற வீட்டைப் பார்த்ததுமே அவள் மிரண்டுப் போனாள். இப்போது அங்குள்ள மனிதர்களைப் பார்த்ததும் ஏதோ நம்ம மட்டும் வேற்றுக்கிரகத்துக்கு வந்துட்டமோ என்றுதான் குழம்பி நின்றாள்.

அந்தக் குடும்பத்தினர் சாதாரணமாக வீட்டுக்கு அணியும் நகைகளே பல இலட்சம் மதிப்புள்ளவைகளாக இருந்தது. தனக்குத்தானே உள்ளுக்குள் அவ்வளவு தாழ்வாக நினைத்தாள்.

அவர்களோ அவளைப் பார்த்தப் பார்வையிலே தெரிந்தது. இவளெல்லாம் ஒரு ஆளென்று ஆயுஷ் போய் இவளைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கானே. பணத்தைத் தூக்கியெறிஞ்சு இதுகளையெல்லாம் விரட்டாமல் கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டு வந்திருக்கான் என்றுதான் அவர்களது எண்ணமும் இருந்தது.

ஒருத்தியை கல்யாணம் பண்ணிட்டு கூட்டிட்டு வந்திருக்கமே அவளுக்கு நம்மதானே துணையாக இருக்கணும்னு ஆயுஷ் நினைக்காத காரணத்தால் அங்கு நித்ராவை மனுஷியாகக்கூட யாரு பார்க்கவும் இல்லை மதிக்கவும் இல்லை.

பூர்விதான் ஆயுஷூக்கு அழைத்து நித்ராவுக்கு மாத்திக்க ட்ரஸ் இல்ல அவளுக்குத் தேவையானதை வாங்கிட்டு வா என்று சொல்லியிருந்தார்.

அவன் இரவுதான் வந்தான்.அதுவரைக்கும் பூர்விதான் வேலைக்காரங்களைவிட்டு ஏதாவது வேணுமா, சாப்பிடுறியா என்று கேட்டுக் கேட்டுவிட்டார்.

அவளோ ஒன்றுமே வேண்டாம் என்று படுத்துக்கொண்டாள். அவளுக்கு இப்போது ஆயுஷை எப்படி எதிர்கொள்ளுவது என்பதுதான் பெரிய பிரச்சனையாக இருந்தது.

எந்த எதிரியையும் எதிர்கொண்டுவிடலாம். ஆனால் அன்பின்பால் கோபங்கொண்டு புரியாது சண்டையிடுபவனை என்ன செய்யமுடியும்?என்று யோசனையிலயே இருந்தாள்.

இரவு வீடு வந்தவன் உள்ளே வந்ததும் வாங்கிவந்த பொருட்களை அவளின் மேலே எறிந்தான்.

இந்தா நல்லா கொட்டிக்கோ நல்லாக் கட்டிக்கோ அதுக்குத்தானே இப்போதைக்கு ஆசைப்பட முடியும். மத்தபடி என் காதலும் அன்பும் உனக்கு சாகுறவரைக்கும் திருப்பிக்கிடைக்காது. உன்னைக் காதலிச்சித் தொலைச்சிட்டேன் அதை என்னால மாத்திக்க முடியாது.காதல் வைச்சது வைச்சதுதான்.நீ இல்லாமால் என்னால் வாழமுடியாதுன்னுதான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கொண்டேனே தவிர உன்கூட சந்தோசமாக வாழ்றதுக்கு இல்லை” என்று திட்டினவன் அவளருகில் வந்தான்.

உனக்கு என்னைவிடவும் எப்படி இன்னொருத்தன் பெருசா தெரிஞ்சான். பணம் அந்தஸ்த்தெல்லாம் வேண்டாம் அன்புல உன்மேல காதல் வைச்சதுல அவன் எப்படி என்னைவிட பெருசா தெரிஞ்சான். சொல்லுடி ஏன் என்னைவிட அவன் உடம்பு நல்லாயிருக்கா உனக்கு அப்படித் தோணுச்சா?”என்று நேரடியாகவே கேட்டான்.

ஆயுஷ் என்று அவன் கேட்டக்கேள்வியில் கதறி அழுதாள்.

அவளின் நாடியை அழுத்திப்பிடித்து “பதில் சொல்லுடி”என்று கேட்டான்.

“ஆயுஷ் ப்ளீஸ் உங்களைத் தவிர நான் யாரையும் மனசுலக்கூட நினைச்சதில்லை”

அப்புறம் எப்படி இன்னோருத்தன் கட்டுற தாலியை வாங்குறதுக்கு மணமேடை வரைக்கும் போன.அப்போ அவன் தாலிக்கட்டியிருந்தா இதே மாதிரி அவன் ரூம்லதானே நீ இருத்திருப்பா. என்கூட அவ்வளவு தூரம் நெருக்கமாக வாழ்ந்த நீ இப்போ அவன்கூட அவன்கூட…அசிங்கமா இல்லையா?”

“தப்பா பேசாதிங்க ஆயுஷ்”

ஆயுஷ்ன்னு கூப்பிடாதடி மரியாதையா ஜீஜூன்னுக் கூப்பிடுடி. நீயெல்லாம் என் பெயரைச்சொல்லக்கூடத் தகுதியில்லாதவள் என்றவன் அவளது கழுத்தைப் பிடித்தான்.

அவளுக்கு மூச்சு முட்டியைது. ஆனாலும் அவன் கொன்னாலும் கொல்லட்டும் ஒன்னும் குத்தமில்லை என்று அப்படிமே அமர்ந்திருந்தாள்.

ஆனால் அவளது கண்களில் இருந்தும் மட்டும் கண்ணீர் வந்துக்கொண்டே இருந்தது.

உடனே அவளைக் கட்டிலில் தள்ளிவிட்டவன் அப்படியே போய் இரவுக்குளியலைப் போட்டுட்டு வந்தான்.அப்போதும் நித்ரா எழும்பாது தனது கண்ணீரோடு அப்படியே கட்டிலில் தலைசாய்த்து உட்கார்ந்திருந்தாள்.

அவளருகில் உட்கார்ந்தவன் அவளது கழுத்தில் முத்தம் வைத்து அப்படியே அவள்மீதே சாய்ந்துக்கொண்டான்.

அவள்தானே அவனுக்கு எல்லாமே.அவளைத்தான் காதலின் மிகுதியிலும் தேடுகிறான்.

அது நித்ராவுக்கும் புரியும், அதானல் அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.

அவளது அமைதியைப் பார்த்தவன் என்னடி இவனை ஏமாத்தலாம்னு பார்த்தோமே கண்டுப்பிடிச்சுக் கட்டிக்கிட்டு வந்துட்டானேன்னு யோசிச்சு தயங்குறீயா என்ன?

அப்படியெல்லாம் தயங்காத நீ எதிர்பார்த்ததைவிடவும் செமையா பெர்பாமன்ஸ் பண்ணுவேன்டி. உன்னை கட்டிக்க வந்தானே அவன் எப்படின்னு உனக்குத் தெரியுமா என்ன? இல்லை கேட்டேன் என்கூடவே உடலோடு உடல் ஒட்டிக்கிட்டு வாழ்ந்தியே அதுதான் கேட்டேன். அவனை விடவும் பெர்பாமன்ஸ் செமையா பண்றேன் என்று அவளை வலிக்க வைக்கவேண்டும் என்று இப்படி பேசியிறாத ஆயுஷ் பேசத்தொடங்கினான்.

அதைக்கேட்டதும் அதிர்ந்துத் திரும்பிப் பார்த்தவள் நான் கல்யாணத்துக்கு முன்னாடியும் என் புருஷன்கூடத்தான் வாழ்ந்தேன். இப்பவும் என் புருஷன்கூடத்தான் வாழப்போறேன். வேற எவனும் என்னை நெருங்கியிருக்க முடியாது. கண்டபடி பேசி உங்க தரத்தை இறக்காதிங்க ஆயுஷ் என்றவளை வேகமாக அறைந்திருந்தான்.

அது அவனது கோபத்தின் அளவைக் காண்பித்திருந்தது!

அப்படியே கண்ணில் பொறி பறக்க சரிந்து விழுந்திருந்தாள் நித்ரா